Thursday 6 September 2018

KERALA FLOOD COVERAGE :கேரளா வெள்ளம் கட்டுரைகள்



கேரளாவில் வெள்ள பாதிப்பு குறித்து பல கட்டுரைகளை எழுத வேண்டியிருந்தது. ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் செய்தி சேகரித்துவிட்டு.அவற்றை எழுதுவதற்கு கணினியை பயன்படுத்த முடியாத சூழலும் ஏற்பட்டது. மின்சாரம் கிடையாது.

நான் தங்கியிருந்த ஒரு விடுதியில் டீசல் ஜெனெரேட்டர் மூலம் மின்சாரம் கொடுத்தார்கள். காலை மற்றும் மாலை அரை மணிநேரம் தந்த மின்சாரத்தைச் சேகரித்துக் கொண்டு எழுதவேண்டியிருந்தது. சில சமயங்களில் வார்த்தைகளை கோர்த்து மனதில் நிறுத்திக் கொள்வேன். அவற்றை சொல்லிப் பார்ப்பேன். சில சமயம் எழுதிவைத்துக்கொள்வேன்.

இப்படியாக, என் அலைபேசியில் கொஞ்சம், மனதில் கொஞ்சம்,தாளில் கொஞ்சம் என ஒவ்வொரு செய்தியையும் கணினியில் எழுதியது புதிய அனுபவமாக இருந்தது.

ஒரு சில செய்திகளை அலைபேசியில் என் அலுவலகத்திற்கு சொன்னால் யாரவது குறிப்பு எடுத்துக்கொண்டு செய்திகளை எழுதிவெளியிட்டார்கள். சார்ஜ் இல்லாத சமயத்தில் எனக்கு உதவியது எனக்கு கார் ஓட்டுனர் அவரது அலைபேசியைக் கொடுத்து உதவினார்.

செய்தி தொகுப்பு:
நான் பார்த்தவை,என்  அனுபவத்தில் ஆங்கிலத்தில் எழுதிய செய்தியை நண்பர் நியாஸ் அகமது மொழி பெயர்த்து எழுதியுள்ளார்..

கேரள வெள்ளம்: களநிலவரம் என்ன? - பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம் #groundreport
https://www.bbc.com/tamil/india-4523321

இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் ஐயாவை பேட்டி எடுத்தேன்.அலைபேசியில், வெள்ளம் ஏற்பட்ட இரண்டாவது நாள்...என் கார் தண்ணியில் மிதந்து சென்று கொண்டிருந்தது..நான் தண்ணீர் மனிதரிடம் பேசிக்கொண்டிருந்தேன்...
 https://www.bbc.com/tamil/india-45204781

உயிர்காக்கும் வேளையில் ஈடுபட்ட உன்னத மனிதனின் கதை இது
https://www.bbc.com/tamil/india-45184186

இந்தியாவில் பல மாநிலங்களில் காண கிடைக்காத ஒரு அரசியல்தலைவரை சந்தித்த அனுபவத்தில் வந்த கட்டுரை
https://www.bbc.com/tamil/india-45219435


எளிமையான அமைச்சர்.. கடுமையான பணிக்கு மத்தியில் எனக்கு சில நிமிடங்கள் ஒதுக்கி பேட்டி கொடுத்தார்..கேரளா  சுகாதார துறை அமைச்சர் ஷாலைஜா டீச்சர்..அமைச்சரின் பெயர் பலகையில் டீச்சர் என்றே எழுதப்பட்டுள்ளது...

https://www.bbc.com/tamil/india-45269239

கேரளாவின் முக்கியமான சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் கவிஞர் சுகதாகுமாரி..இவரை சந்தித்ததே நான் பெற்ற பெரும் பேறு..அவர் கவிதை வாசித்தபோது,,கண்கள் குளமாகின..

https://www.bbc.com/tamil/india-45261753





No comments:

Post a Comment