Thursday 6 July 2023

பெருமகிழ்ச்சி

பெருமகிழ்ச்சி
33 ஆண்டுகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய ஒரு செவிலியர் ஒருவர் தனது பனிக்காலத்தில்  10,000க்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களை கையாண்டிருக்கிறார். அதிலும் ஒரு இறப்பு கூட ஏற்படாமல் அவர் தனது வேலையை திறம்பட செய்திருக்கிறார். அவரை பற்றிய கட்டுரையை பிபிசிதமிழுக்காக எழுதியிருந்தேன்.. 

https://www.bbc.com/tamil/articles/cxe7xpprrkjo

அந்த செய்தி தற்போது பிபிசியின் உலகசேவையின் பல மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்திய மொழிகள் மட்டுமல்லாது பல உலக மொழிகளில் அந்த செய்தி வெளியாகியுள்ளதில் பெருமகிழ்ச்சி..

துருக்கி, தாய், நேபாளி,அரபி,உ,ருது,மராத்தி,ஆங்கிலம்குஜராத்தி,இந்தி என பல மொழிகளில் அந்த செய்தி வெளியாகியுள்ளது..

https://www.bbc.com/urdu/articles/cjm7wkmpn8zo
https://www.bbc.com/turkce/articles/ce9we03zy97o
https://www.bbc.com/thai/articles/c72vyl14lg4o
https://www.bbc.com/marathi/articles/cz5kxv108lmo
https://www.bbc.com/arabic/articles/c512z6nv92go
https://www.bbc.com/news/world-asia-india-66062800
கூடுதல் மகிழ்ச்சி, அந்த செய்தியை கேள்விப்பட்டு, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், அந்த செவிலியரை நேரில் பாராட்டினார்.அடுத்ததாக , தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிபிசிதமிழில் வெளியான செய்தியை குறிப்பிட்டிருந்தார்...
https://twitter.com/mkstalin/status/1674781761354764294
 தினமும் பல விதமான மனிதர்களை சந்திக்கிறேன்.. பல புதிய செய்திகளை 
தெரிந்துகொள்கிறேன். சமீபத்தில் நான் எழுதிய ஒரு செய்தி எனக்கு மிகவும் உற்சாகத்தை தந்தது.