வெள்ளிக் கிழமை புன்னகை
திருபோரூ ர் மற்றும் கேளம்பாக்கம் அரசுப் பள்ளிக்கு சென்றேன். நிறைய குழைந்தைகள் ABL அட்டைகளை வைத்து படித்துக்கொன்று இருந்தனர். அவர்களின் முகங்களில் புன்னகை, தன்நம்பிக்கை இருந்தது. அவர்கள் டீச்சர் இல்லாவிட்டாலும், இருந்தாலும் அவரவர் கற்றலில் இடுபட்டு இருந்தனர். ஒரு மாணவி சொன்னால்: இது நானே செய்த ஆடு பொம்மை." உடனே அடுத்து இருந்தவர்களும் தங்கள் செய்து வைத்திருந்த பொம்மைகளை எடுத்துவந்தனர்.
நான் ஸ்கூலில் படித்தபோது, டீச்சர் இரண்டு நிமிடம் லேட்டாக வந்தால் சந்தோஷம்தான்.அதே போல வெள்ளிக் கிழமை இன்னும் சந்தோஷம். பெல் அடிக்கும் தருணம் அளவிட முடியாத புன்னகை இருக்கும். இந்த குழந்தைகளிடம் அந்த வெள்ளிக் கிழமை புன்னகை இருந்ததாக உணர்ந்தேன்.

No comments:
Post a Comment