Friday, 16 August 2013

மனிதர், மாமனிதர்: 

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

அவரது வார்த்தைகளில் :

நிலம் இல்லாதவனுக்கு நிலம் வாங்கி தரனும் என்ற எண்ணம் பேய் புடிச்ச மாதிரி மனசுக்குள்ள. வீடு, காடு இதை தவிர வேற எண்ணம் எதுவுமே இல்லை.

நாகபட்டினத்தில் நிலசுவந்தார் ஒருவர் சபதம் போட்டார். ஒரே நாளில் ரெஜிஸ்டர் பண்ணுவதாக  இருந்தால் உடனடியாக கேட்ட நிலத்தை தரேன் என்றார். முழு பணத்தையும் தர வேண்டும் என்றார். என்னிடம் பணம் கிடையாது. நம்பிக்கை மட்டும், துணிவு மட்டும், நான் பிராத்திக்கின்ற வள்ளலாரின் பக்தி மட்டும் துணையாக...உடனடியாக சரி என்றான்.

அவரிடம் 1,040 எக்கர் நிலம் இருந்தது. அதை வாங்க வேண்டும். தாட்கோ நிதி மட்டும் கிடைத்தால் போதும், வருவாய் துறையில் தலித்துகளுக்கு பத்திரபதிவு செய்வதற்கு உள்ள கழிவுத் தொகை இருப்பதால் வேறு செலவு கிடையாது.

கலெக்டர் ஜவஹரிடம் சென்றேன் . 1,040 ஏக்கர் நிலம் ரெடியாக இருக்கிறது, நிலசுன்வந்தர் குறைந்த விலைக்கு கொடுக்க முன்வந்துள்ளார். அனால் நிலசுவந்தார் ஒரே நாளில் ரெஜிஸ்டர் பண்ண வேண்டும் என்கிறார்  என்றேன். உங்கள் உதவி கிடைத்தால் ஏழை மக்களுக்கு வீடு கிடைக்கும் என்றேன்.பயனாளிகள் தயாராக உள்ளனர் என்றேன்.

கலெக்டர் உடனடியாக ஒரு ஆர்டர் போட்டார் . எல்லா VAO, தாசில்தார் மற்ற அதிகாரிகளைவரச் சொன்னார். அடுத்த நாள் காலை எல்லோரும்வந்துவிட்டனர் .நானும் பயனளிகளுடன் வர,உடனடியாக ரேஜிஸ்டரேசன் துவங்கியது.கலை 10 மணி ஆரம்பித்தது அடுத்த நாள் கலை 3 மணிக்குத்தான் முடிந்தது. கலெக்டர் கூடவே இருந்தார்.அவரை ஓய்வு எடுக்கசொன்னபோது சிரித்துவிட்டு என்னுடனே இருந்தார். எல்லா பயனளிகளுகும் நிலப்பத்திரம் ரெடி ஆனது.

அடுத்த நாள் மெட்ராஸ்ல் வருவாய் துறை அதிகாரியைச் சந்தித்து பத்திர பதிவு தொகையில் கழிவு இருப்பதைச் சொல்லி, பதிவிற்கு அனுமதி கேட்டேன். அதிர்ந்துபோனார். "அரசாங்கத்திற்கு இது பெரிய நஷ்டம்"என்றார். மேலும் இதுபற்றி விவதிதுவிட்டு சொல்வதாக சொன்னார்.

ஒரு வேலை ஆரம்பித்தால்எனக்கு  அதை உடனடியாக முடித்தாக வேண்டும். பஸ் பிடித்து முதலமைச்சர் கலைஞர் வீட்டுக்குப் போனேன்.செக்யூரிட்டி போலீஸ் என்னை விசாரித்துவிட்டு நான் ஏன் தனியாக வந்தேன் என்று
கேட்டனர். "நீங்கள் எல்லாம்என்னுடைய நண்பர்கள் தான் என்றான்." சிரித்துவிட்டு என்னை கலைஞரை சந்திக்க அனுப்பினர். விவரத்தை சொன்னவுடன் கலைஞர் யோசிக்கவில்லை. வருவாய் துறை அதிகாரிக்கு உத்தரவு போட்டார். என்னை திருப்பி அனுப்பிய வருவாய் அதிகாரி வரவேற்றார். எல்லா பத்திரங்களுக்கும் கழிவு உறுதி ஆனது. 

அடுத்ததாக தாட்கோ அலுவலகம் சென்றேன். நிலையை விலக்கி மிக அவசரமாக நிதி வேண்டும் என்றேன். தாட்கோ அதிகாரிகள் நிலைமை உணர்ந்து சீக்கிரமாக நிதி கொடுத்தனர். மிகுந்த சந்தோசத்துடன் நாகப்பட்டினம் வந்தேன். தாட்கோ நிதி மற்றும் வருவாய்த் துறை பதிவு தொகை கழிவு என எல்லாம் கை கூடியது. சொன்னபடி நிலசுவந்தரிடம் பணத்தை கொடுத்து 1,040 பத்திரங்களும் ஒரே நாளில் பதிவாகியது.

(இன்று கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் வீட்டில், அவருடன் ஒரு நாள் கழித்தேன் . நெகிழ்ச்சியான நாள்.)  

No comments:

Post a Comment