Showing posts with label women. Show all posts
Showing posts with label women. Show all posts

Friday, 3 February 2017

வரதட்சணையை ஊக்குவிக்கிறதா பள்ளி புத்தகம் ?



மஹாராஷ்டிராவில் அரசு வழங்கியுள்ள சமூகவியல் பட புத்தகத்தில் அழகில்லாத பெண்கள் மற்றும் மாற்று திறனாளி பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க அவர்களின் பெற்றோர் அதிக வரதட்சணை தரவேண்டியுள்ளது என்று வெளியிடப்பட்டுள்ளது. 

கல்யாணம் என்ற சடங்கின் தன்மை தற்போது மாறி வரும் வேளையில் அரசு வெளியிடும் ஒரு புத்தகத்தில் இது போல வெளியிட்டுள்ளது மிகவும் அவமானகரமானது. 

கல்வி அமைச்சர் தற்போது அந்த கருத்தை திருத்த உத்தரவிட்டுள்ளார். 
சரி அந்த புத்தகத்தை எழுதிய அறிவு ஜீவிகள் யார் யார் ?? 





Thursday, 5 January 2017

மோதியை எதிர்த்ததால் இணையத்தில் பாலியல் தாக்குதல்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி புகார்

மோதியை எதிர்த்ததால் இணையத்தில் பாலியல் தாக்குதல்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி புகார்


http://www.bbc.com/tamil/india-38521463


பாஜகவின் ஐ.டி (IT- information technology) பிரிவில் பணிபுரிந்த சாத்வி கோஸ்லா என்ற நபர் சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு எதிர்க்கருத்து தெரிவிப்பவர்கள் மீது அவதூறு செய்திகளை பரப்பும் வேலை தனக்கு அளிக்கப்பட்டதாகவும், அதை விரும்பாமல் அதில் இருந்து விலகியதாகவும் ஐ ஏம் எ டிரால் (I Am A Troll) என்ற புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார் என்ற ஜோதிமணி, அதன் ஒரு எடுத்துக்காட்டுதான் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்கிறார்.