Thursday, 13 October 2022



முட்டையை பற்றி தெரியாத முட்டையாக இருந்தேன்!!

ஒரு செய்தியாளராக பல விதமான கட்டுரைகளை எழுதுவதற்காக விதவிதமான நிபுணர்களிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும். முட்டை தினத்திற்காக கட்டுரை எழுதுவதற்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தில் உள்ள பேராசிரியர் செல்வனிடம் பேசினேன். 

பெரும்பாலான மக்கள் நாட்டுக்கோழி முட்டையில் சத்து அதிகம் இருப்பதாக எண்ணுகிறார்கள். விலை அதிகமாக இருந்தாலும், அதற்கு செலவிடுகிறார்கள். நாட்டுக்கோழி கறி மற்றும் முட்டைக்கு தனி சந்தை உருவாகியுள்ளது. இதை புரிந்துகொள்ள பலவிதமான விவரங்களை கேட்டறிந்தேன். அந்த நல்அனுபவத்தை என் நண்பர்களுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி. 

முட்டையை பற்றி தெரியாத பல தகவல்களை இந்த கட்டுரை எழுதும் போது தெரிந்துகொண்டேன் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. 

கோழி முட்டையிட சேவல் தேவையில்லை என தெரிந்துகொண்டபோது அது எனக்கு வியப்பாக இருந்தது... இன்னும் பல தகவல்கள் இந்த கட்டுரையில்: 

https://www.bbc.com/tamil/india-63238662



No comments:

Post a Comment