Saturday, 2 July 2016

ஜாலியான டெல்லி ரிக்சா பயணம்



டெல்லியின் சுவாரசியமான அம்சம் இங்குள்ள சைக்கிள் ரிக்சா.

முதல் ஆச்சரியம் இந்த சவாரிக்கு நாம் கொடுக்கும் காசு.  2 அல்லது 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக 20  ரூபாய் தான் வாங்குகிறார்கள்.

சில பேர் வீடு மாறும் போது ரிக்சா வண்டியில் எல்லா பொருட்களையும் வைத்து எடுத்து போகிறார்கள்.

ஒரு சென்னை வாசியாக இந்த டெல்லி ரிக்சா வண்டியில் பயணம் செய்வது ஜாலியாக இருக்குது.

எனக்கு பெரிய வியப்பு இவர்களின் உழைப்பு. மிக சிரமமப்பட்டு தான் வண்டி ஓட்டுகிறார்கள்.

ஆனால் சென்னை ஆட்டோ மாதிரி அதிக காசு வாங்குவதில்லை...

'கிளிங்' என்ற மணிச்சத்தம், வளைஞ்சு நெளிஞ்சு குட்டி தெருக்களுக்குள் சல்லனு போகிற ரிக்சாவில் இப்போ பயணம் ஸ்டார்ட்...

No comments:

Post a Comment