வெங்காயம்; புன்னகை; கண்ணீர்
MSSRF (M S Swaminathan Research Foundation) மூலமாக ஒரு பத்திரிக்கையாளர்களுக்கு கருத்தரங்கு நடைபெற்றது . அதன் முடிவில் கரசனுர் என்ற ஒரு கிராமத்திற்குக் கூடிச் சென்றனர் . விழுப் புரம் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் MSSRF கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வருகிறது. ஏற்றுமதி தரம் வாய்ந்த வெங்காயங்களை இங்குள்ள விவசாயிகள் பயிரிட்டு முன்றே மாதத்தில் சுமார் ரூ.2 லட்சம் இரண்டு ஏக்கர் நிலத்தில் சம்பாரிப்பதாகத் தெரிவித்தனர்." எங்களின் வெங்காயம் சிங்கபூர் மற்றும் மலேசியாவிற்குச் செல்கிறது . அங்கே சூப் செய்ய இதைப் பயன் படுத்துகிறார்கள்," என்றனர் .கூட் டத்தின் முடிவில் அவர்களிடம், வருமானம் நல்லா கிடைக்கிறது, வாழக்கை நிலையும் மாறி இருக்கிறது. உங்களில் எத்தனை பேர் உங்கள் குழந்தைகளை விவசாயியாக இருக்க அனுமதிப்பீர்கள் என்று கேட்டேன். சுமார் 50 விவசாயிகள் இருந்த அந்த கூடத்தில் ஒருவர் கூட கை தூக்கவில்லை. ஏன் என்ற போது, "நங்கள் படும் பாடு போதும். எங்கள் பிள்ளைகள் கஷ்டப்பட வேண்டாம்," என்றனர். இரண்டு பெற்றோர் அவர்களின் பிள்ளைகள் ஆர்வமுடன் விவசாயம் செய்ய ஆசைப்பட்டனர் தாங்கள் தடுத்து இன்ஜினியரிங் கல்லூரியில் சேரத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment