ரோஹிஞ்சாக்கள்..
LINK: http://www.bbc.com/tamil/india-40688019
பெரும்பான்மை பௌத்த மதத்தினர் ரோஹிஞ்சா இஸ்லாமியர்களை விரட்டுகின்றனர் என்பதால் சுதந்திரத்தை தேடி சென்னையை
வந்துசேர்ந்ததாக கூறுகிறார்கள் இவர்கள்.....
அகதியாக வாழும் ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமானது.. தன்னுடைய நிலத்தை விட்டு,
வேறு இடத்தில் தெரியாத மக்களின் அன்பை, ஆதரவை தேடும் அந்த வாழ்க்கை... தினமும்
தளும்புகள் விழுவது போன்ற அனுபவம்..
இவர்களின் கதைகள் சுதந்திரத்தின் விலை என்ன என்பதை உணர்த்தியது...
எந்த கவலையும் இல்லாமல் சென்னைவாசியாக மாறிப்போன
ரோஹிஞ்சா குழந்தைகள் மட்டுமே மகிழ்ச்சியுடன், கொண்டாடத்துடன் காணப்படுகிறார்கள்....
ரோஹிஞ்சா குழந்தைகள் மட்டுமே மகிழ்ச்சியுடன், கொண்டாடத்துடன் காணப்படுகிறார்கள்....
சமீபத்தில் காலமான ஓவியர் வீர.சந்தனத்தின் வரிகளை பத்திரிகையில் படித்தேன்... ஈழப்
போரின்போது அவர்எழுதியது...
காந்தி தேசம் துப்பாக்கி கொடுத்தது
புத்ததேசம் கொன்று குவித்தது..
...புத்தன், காந்தி இயேசு பிறந்தது பூமியில் எதற்காக? தோழா ஏழைநமக்காக....
வாலியின் பாட்டைக் கேட்டுவிட்டு அடுத்தவேலையைப் பார்க்கபோய்விடுகிறோம்?