Saturday, 27 August 2016

இத்தாலியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து அங்குள்ள தமிழரின் பேட்டி 

https://audioboom.com/boos/4978608-

இத்தாலியில் ஏற்பட்டுள்ள நில நடுக்கம் பற்றிய செய்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது, மனதிற்கு பாரமாக இருந்தது. சென்னை வெள்ளத்தில் நொடிந்த மக்கள் என் நினைவுக்கு வந்தனர். நான் எனது குடுமத்துடன் பத்திரமாக இருந்தேன். மனம் சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பார்த்து கதறி அழுதுவிட்டு வந்தது. 

ஹ்ம்ம்... எப்படி இத்தாலியும், சென்னையும் ஒண்ணாகும்??? தெரியல... என்னை பொருத்த வரை.. எல்லா ஊர்லயும் இருக்கிற மக்கள் எனக்கு நண்பர்கள் தான்...இத்தாலியில் நிலநடுக்கம்  பத்தி அங்குள்ள தமிழரை எப்படி தேடுவேன்??? 

இணையத்தில் நுழைந்தேன்... இத்தாலியில் உள்ள ஒரு தேவாலயத்தில் உள்ள ஒரு பாதர் எண் கிடைத்தது..அவர் மூலம் ஒரு தமிழரின் எண்...எப்படி தான் அந்த பேட்டி தயாரானது... 

இந்த மாதிரி செய்திகள் எழுதும்போது கிடைக்கும் ஒரு சின்ன நிம்மதி என்னால் அந்த கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாது..ஆனால் அந்த கண்ணீர் எவ்வளவு வலி மிகுந்தது என்று பிறருக்கு ஊடகம் மூலமா கொண்டு போய் சேர்க்க முடியும்னு...

அதன் தொடர்ச்சி தான் இந்த பேட்டி...



Friday, 12 August 2016

ரியோ ஒலிம்பிக்ஸ் 2016ம் தி.நகர் தங்க மாளிகையும் 

ஒலிம்பிக்ஸ்ல தங்கம் வாங்கலனு , தங்கம் வாங்கலனு....ஒரே தகராறு பா..
உலகத்திலேயே பெரிய நகை கடை எல்லாம் தி.நகர்ல தான இருக்கு!!!
எதுக்கு எல்லாத்துக்கும் செலவு செஞ்சு ரியோ டி ஜெனிரோ(நம்ம ஊரு பெருசுக வாயில நுழையாத பேரு)வ்வுக்கு போனாங்க???

பட் சீரியஸ் கைஸ்....

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் எகானமி கிளாஸ்ல விட்டு அதிகாரிகள் பிசினஸ் கிளாஸ்ல போயிருக்காங்க...இவுங்க தான் தடகள வீரர்..அதிகாரிகளுக்கு எதுக்கு பிசினஸ் கிளாஸ்?? 36 மணி நேர பயணம் பண்ணி ஆகஸ்ட் 19 தேதி போட்டியில கலந்துகபோறாங்க.. இப்போ தெரியுதா ஏன் நாம தி.நகர்ல மட்டும் தான் தங்கம் வாங்க முடியும்னு?