WARM WELCOME - குளிர்ந்த நெஞ்சுடன் வரவேற்றான்
Warm regards , warm welcome, heart-warming story இப்படி பல வார்த்தைகளில் நாம் ஆங்கிலேயர்களின் வார்த்தை பிரயோகத்கை அப்படியே பயன்படுத்துகிறோம். கடந்த வாரம் பூவுலகின் நண்பர்கள் நடத்திய 'பொழுதுகள் 6'' நிகழ்ச்சியில் நண்பர் நக்கீரன் இது எவ்வளவு வேடிக்கையானது என்று விளக்கினார். குளிர் பிரதேசத்தில் இருக்கும் ஆங்கிலேயர்களுக்கு வெய்யில் என்பது விருப்பமான ஒன்று. அவர்கள் வெயிலை வரவேற்பார்கள். அதனால் தான் warm regards , warm welcome, heart-warming என பயன்படுத்துகின்றனர்.
நாமோ சுட்டெரிக்கும் வெயிலுக்குச் சொந்தகாரர்கள். நமக்கு குளிர்ச்சி தான் தேவை. அதை தான் நம் விரும்புகிறோம். அதனால் தான் தமிழில் ''குளிரிந்த பார்வை பார்த்தாள், குளிர்ந்த நெஞ்சுடன் வரவேற்றான்' என்று பயன் பயன்படுத்துகின்றோம். நான் warm regards என்று இ-மெயிலில் பயன்படுத்துவதில்லை!!. கொஞ்சம் யோசிப்போம்.